மெய்ப் பக்தனே நீ நித்திரை


47.     "Sleep on beloved, sleep and take thy rest" (1041)

1.         மெய்ப் பக்தனே! நீ நித்திரை செய்கிறாய்,
            மா நேசர் மார்பில் சாய்ந்து சுகிப்பாய்;
            பேரின்பக் கரை ஏறிக் களிப்பாய்;
            துயில்வாய்! துயில்வாய்! துயில்வாய்!

2.         ஓர் சிசுபோல மிகச் சாந்தமாய்
            கேடணுகாமல் துயிலுகிறார்;
            எப்பாடும் தீங்கும் என்றும் அடையாய்,
            துயில்வாய்! துயில்வாய்! துயில்வாய்!

3.         பாவந்தகாரம் பறந்தோடவும்,
            இப்பூவின் மாய்கை தீருமளவும்,
            மாசுடரொளி! வீசும் வரைக்கும்
            துயில்வாய்! துயில்வாய்! துயில்வாய்!

4.         எக்காளச் சத்தம் வானில் கேட்கவும்,
            மெய்ப்பக்தர் யாரும் உயிர்த்தெழவும்,
            மா வல்ல தேவன் வருமளவும்,
            துயில்வாய்! துயில்வாய்! துயில்வாய்!

5.         தெய்வீக சாயல் உன்தன் ஆவியில்
            மாசணுகாமல் துலங்குகையில்,
            பொற் க்ரீடஞ்சூடி ஆளும்வரையில்
            துயில்வாய்! துயில்வாய்! துயில்வாய்!

6.         ஆ! நேசனே! நல்நித்திரை அடைந்தாய்,
            மா சொற்ப காலம் நீங்கியிருப்பாய்.
            அப்பாலே யேசுவோடு வருவாய்.
            துயில்வாய்! துயில்வாய்! துயில்வாய்!

7.         மா ஜோதி வீசும் வாசஸ்தலத்தில்
            மேலோக நாதர் சந்நிதானத்தில்,
            எல்லோரும் கூடி வாழும் வரையில்
            துயில்வாய்! துயில்வாய்! துயில்வாய்!

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு