எந்தன் ஆத்ம நேசரே
10. 'Jesus Lover of my soul' (227, 1172)
1. எந்தன் ஆத்ம
நேசரே!
வெள்ளம் போன்ற துன்பத்தில்,
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்,
தஞ்சம் தந்து, யேசுவே,
திவ்ய மார்பில் காருமேன்;
அப்பால் கரை யேற்றியே
மோட்ச வீட்டில் சேருமேன்.
2. வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்;
கைவிடாமல், நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்.
நீரே எந்தன் நம்பிக்கை;
நீர் சகாயம் செய்குவீர்.
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்.
3. குறை யாவும் நீக்கிட
நாதா நீர் சம்பூரணர்.
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்.
நான் அசுத்த பாவிதான்;
நீரோ சுத்தர் சுத்தரே.
நான் அநீதி கேடுள்ளோன்;
நீர் நிறைந்த நீதிரே.
4. பாவம் யாவும் மன்னிக்க
மூட வல்லோரான நீர்
என்னைச் சுத்திகரித்து
அருள் பாயச் செய்குவீர்.
ஜீவ ஊற்றாம் யேசுவே!
எந்தன் தாகம் தீருமேன்,
ஸ்வாமி! என்றும் என்னிலே
நீரே ஊறி வாருமேன்.
Comments
Post a Comment