திக்கற்ற பாவி நான்


9.       'I hear the Saviour say'           (855)

1.         திக்கற்ற பாவி நான்,
            சீர்கெட்ட நீசனே.
            சொந்தக் கிரியை கந்தைதான்;
            என்தன் கதி யேசுவே.

பல்லவி

            கடனில்லையாம்!
            தீர்ந்து போயிற்றே,
            யேசுவால் என் தீதெல்லாம்
            நிவிர்த்தியாயிற்றே.

2.         என் நேச ரக்ஷகா!
            உம் திரு ரத்தமே
            தீமை, கரை, மாசெல்லாம்
            நீங்கிவிடச் செய்யுமே.

3.         என் குணம் தீயதே;
            என்றாலும் தேவரீர்
            மாசில்லாத ரத்தத்தால்
            சுத்த ஸ்பாவம் அளிப்பீர்.

4.         நான் சாக நேரிட்டால்,
            சந்தோஷ மடைவேன்.
            பாவக்கடன் தீர்ந்ததால்
            பாடிக் கரை ஏறுவேன்.

5.         நல்ல மோக்ஷஞ் சேரவும்
            பேரின்பம் பெறுவேன்.
            யேசுநாதர் பாதத்தில்
            தாழ்ந்து நமஸ்கரிப்பேன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு