கல்லும் அல்லவே காயம் வல்லும்


கல்லும் அல்லவே காயம்

355. (331) காபி                                             ஆதி தாளம் 
பல்லவி

          கல்லும் அல்லவே, காயம்-வல்லும்[1] அல்லவே-இது

அனுபல்லவி

            வெள்ளி, பொன் விலைமதியா மேரும் அல்லவே. -  கல்

சரணங்கள்

1.         வல்லமை பேசாதே, நாளை  வருவதறியாய்,-அதால்
            நல்ல வழி தேடி, தேவ நாமத்தைத் தியானி. - கல்

2.         சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ?-சாலமோன்
            பார்[2] அறிய சொன்னதை நீ பார்த்தறியாயோ? - கல்

3.         காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே,-இங்கே
            போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே. - கல்

4.         வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே,-மாய
            தேக நரர் நாட்களும் சீக் கிரம் கழியுமே. - கல்

5.         இராப் பகல், இருள், வெளிச்சம் மாறும் வண்ணமே,-ஐயோ!
            நராட்களின் மகிழ்ச்சிக்கு மா மாறுதல் உண்டே. - கல்

6.         பூவதும் உதிரும், பசும் புல்லும் வதங்கும்.-அது
            போலவே நரர் உருவம் மாறி வதங்கும். - கல்

7.         மேலது கீழ், கீழதுமேல் ஆம் உருளைபோல்,-நரர்
            மேன்மையும் வாழ்வும் கீழது மேலும் ஆகுமே. - கல்

8.         நுண்ணிமை ஞானி என்றாலும் கீர்த்திபெற்றாலும்,-ஐயோ!
            அன்னவன் மலையும்[3] நேரம் யாவும் கலையும். - கல்

9.         ஆசனம், துரைத்தனம், தத்துவங்கள் ஒழியும்,-அர
            சாண்ட மன்னரும் ஒரு நாள் மாண்டொழிவாரே. - கல்

10.       யாவும் ஓட்டமாகப் பாயும், யாவும் அழியும்,-மெய்த்
            தேவபக்தி யே கெலிக்கும்;[4] ஜீவன் நிலைக்கும். - கல்

- வே. சாஸ்திரியார்


[1] வலிமை
[2] உலகம்
[3] மறையும்
[4] வெல்லும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு