பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே


பொன்னகர் போகும் புண்ணியர்களே

356. (338) காபி                                                      ஆதி தாளம்

பல்லவி

          பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை
          என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே.

சரணங்கள்

1.         உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர்
            தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. - பொன்

2.         லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர்
            நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. - பொன்

3.         வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று
            வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? - பொன்

4.         மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு
            தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. - பொன்

5.         கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில்-சென்றோர்
            நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார். - பொன்

6.         ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு-புதுப்
            பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார். - பொன்

7.         கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கியரென்று-சொல்லும்
            உத்தம வேதத்தின் உண்மை உன்னத மல்லோ? - பொன்

- ஜி.சே. வேதநாயகம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு