தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே


பண்டிகை ஆசரிப்போமே

357. யமுனாகல்யாணி                                               ஆதி தாளம்

பல்லவி

            தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே,
            தூயகம் ஊறிய பக்தியால் நாமே. - தோத்திர

சரணங்கள்

1.         பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி
            பரமனுக் கர்ப்பணஞ்செய் பரிவு நிறைய மேவித். - தோத்திர

2.         பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தினதன்றே
            பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே. - தோத்திர

3.         கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே,
            காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே. - தோத்திர

4.         நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
            நித்திய சமாதானம் நிறுவ விண்ணப்பம் செய்து. - தோத்திர

5.         இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
            இதயத்தில் விதைத்ததற் கின்குணப் பலன்வைத்துத் - தோத்திர

- சா. மாசிலாமணி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு