விரும்பாதே மனமே உலக வாழ்வை


உலக வாழ்வை விரும்பாதே

354. (357) காம்போதி                                              சாபு தாளம் 
பல்லவி

         விரும்பாதே, மனமே,-உலக வாழ்வை
         விரும்பாதே, மனமே;-பதவி என.

சரணங்கள்

1.         தரம் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக்
            கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை - விரும்பாதே

2.         அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும், மா
            மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் - விரும்பாதே

3.         பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும்,
            ஜலத்தின் ஓட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்துபோவார். - விரும்பாதே

4.         திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி, என்றே
            அட்டதிக்கிலும் உன் பேர் இஷ்டம் புரிந்தாலும். - விரும்பாதே

5.         பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும்,
            என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்து நீ - விரும்பாதே

6.         லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு,
            ஏக பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே. - விரும்பாதே

7.         நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில்
            களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு. - விரும்பாதே

­- ச. யோசேப்பு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு