09 May 2019

பரம வைத்தியா அருமை ரட்சகனே


வைத்தியப் பணியினை ஆசீர்வதியும்

352. உசேனி                                                   ரூபகதாளம் 
பல்லவி

          பரம வைத்தியா! அருமை ரட்சகனே! பிணிதீர்க்கும்
          வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே!

சரணங்கள்

1.         பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே-மருந்தோடே உமது
            பேரதிசய கிருபை கூருமே. - பரம

2.         உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும்-அவருடன் துணை நின்று
            உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும். - பரம

3.         சயமும் சுரமும் பயமுறுத்துமே,-இதைத் தடுத்திடக் கொடை
            தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே. - பரம

4.         அரிய நூதன முறைகள் காணவே-ஆராய்ச்சிகள் செய்யும்
            அறிஞரால் புதுவழிகள் தோன்றவே. - பரம

5.         ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்
            ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா! - பரம

- ல. பொன்னுசுவாமி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...