யேசுநாயகா வந்தாளும் எந்நாளும்


யேசு நாயகா வந்தாளும் 
345. (312) கேதாரகௌளம்                                   ஆதி தாளம்

பல்லவி

            யேசுநாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய
            யேசுநாயகா, வந்தாளும்.

அனுபல்லவி

            ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - யேசு

சரணங்கள்

1.         சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
            உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே - யேசு

2.         உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,
            நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. - யேசு

3.         துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக
            மங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க. - யேசு

4.         நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
            புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க. - யேசு
- வே. சாஸ்திரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு