நிறைவுற வரந்தா நியமகம்


நிறைவுற வரந் தா

344. மோகனம்                                               ரூபகதாளம் 
பல்லவி

                        நிறைவுற வரந்தா,-நியமகம்
                        நிறைவுற வரந்தா.

அனுபல்லவி

                        நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், - நிறை

சரணங்கள்

1.         உரிய தொண்டருக்கில்லமே,-இங்கு
            உண்டமைக்கும் எங்கள் தெய்வமே!
            உன் திருத்தாளரண்[1] எங்களுக்குகே சரண் - நிறை

2.         ஆதம் தனித்த நிலையது-நல்ல
            தல்லவென்று கண்டவனது
            அங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. - நிறை

3.         ஆபிரகாம் எலியே சரும்-மன்
            றாடிய வேண்டுதல் கேட்டொரு
            அங்கனை[2] நெஞ்ச மிணங்க வகை செய்தாய். - நிறை

4.         உலகம் பேயுடல் முப்பகை-இவர்
            ஓப்பந்தத் தீண்டா துனது கை
            ஓங்கியே தாங்கி யுறுதுணை தந்துமே. - நிறை

5.         ஒப்பந்தத் தாலிரு சார்பினர்-தமை
            உற்றவர் மற்றவர் நற்றவர்
            உன்னதா சீரடைந்துன் மகிமை தர. - நிறை

- ஜி.சே. வேதநாயகம்


[1] திருப்பாதமாகிய கோட்டை
[2] மகன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு