நிச்சயம் செய்குவோம் வாரீர்
நிச்சயம் செய்குவோம்
343. கமாஸ் அடதாளம்
பல்லவி
நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோம் வாரீர்.
சரணங்கள்
1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி.
- நிச்சயம்
2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே.
- நிச்சயம்
3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,
கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே.
- நிச்சயம்
4. இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே.
- நிச்சயம்
-
வீ. ஜயராஜ்
Comments
Post a Comment