ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய


ஓய்வுநாளை ஸ்தாபித்த உன்னதா

342. (343) ஆனந்தபைரவி                                 ஆதி தாளம்

பல்லவி

                   ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய
                   உன்னதா, உமக்கே ஸ்தோத்திரம்!

அனுபல்லவி

            மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு
            வாழ்த்தி, உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு[1] - ஓய்வு

சரணங்கள்

1.         தேகக் கவலை, தொழில், யாவையும் ஒழிக்கத்,
            திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க,
            ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல்[2] அறத் தழைக்க,
            எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க. - ஓய்வு

2.         விண்ணோ ருடன் யாவரும் ஆவியில் கூட,
            வேதா, உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட,
            மண் உலகில் போராட்டச் சாலையில் ஓட,
            வரம் அளித்திட உம்மைக் கெஞ்சி மன்றாட, - ஓய்வு

3.         முத்தி வழி விலக்கும் துர்க் குணம் மாற்றி,
            முன் நின் றெம்மை நடத்தியே கரை ஏற்றி,
            எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய்ப் போற்றி
            இறைஞ்ச அருளும் உமதாவியை ஊற்றி. - ஓய்வு

- யோ. பால்மர்


[1] மலர்ந்து
[2] பகை

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே