சந்தத மங்களம் மங்களமே


உன் ஆசிடை சாற்றும்

347. (310) கேதாருகௌளம்                                    ரூபகதாளம் 
பல்லவி

                        சந்தத மங்களம், மங்களமே!
                        சந்தத மங்களம், மங்களமே!

அனுபல்லவி

                        அந்தம் ஆதி இலான் அருள் சேயா,
                        எந்தை யேசு கிறிஸ்து சகாயா. - சந்தத

சரணங்கள்

1.         அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,
            இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. - சந்தத

2.         வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-து
            உய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும், ஏக திரித்துவ தேவா - சந்தத

3.         கர்த்தனே, கருணைக் கடலே, உயர் பெத்தலைப் பிரதாப விசேடா!
            புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம் வைத்தே இவர்க் கருள் செய்திடும். - சந்தத

- வே. சாஸ்திரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு