ரட்சா பெருமானே பாரும்


58.     'Saviour, like a shepherd lead us,'             (1164)

1.         ரட்சா பெருமானே பாரும்!
            புண்ணிய பாதம் அண்டினோம்
            சுத்தமாக்கி சீரைத்தாரும்,
            தேடிவந்து நிற்கிறோம்.
            யேசுநாதா! யேசுநாதா!
            உன்தன் சொந்தமாயினோம்.
            யேசுநாதா! யேசுநாதா!
            உந்தன் சொந்தமாயினோம்.

2.         மேய்ப்பன்போல முந்திச்சென்றும்
            பாதுகாத்தும் வருவீர்.
            ஜீவத்தண்ணீரண்டை என்றும்
            இளைப்பாற செய்குவீர்.
            யேசுநாதா! யேசுநாதா!
            மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.
            யேசுநாதா! யேசுநாதா!
            மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்

3.         நீதிபாதை தவறாமல்
            சுகமாகக் காக்கிறீர்.
            மோசம் பயமுமில்லாமல்
            தங்கச்செய்து தாங்குவீர்.
            யேசுநாதா! யேசுநாதா!
            ஒருபோதும் கைவிடீர்.
            யேசுநாதா! யேசுநாதா!
            ஒருபோதும் கைவிடீர்.

4.         ஜீவகால பரியந்தம்
            மேய்த்தும் காத்தும் வருவீர்.
            பின்பு மோட்ச பேரானந்தம்
            தந்து வாழச்செய்குவீர்.
            யேசுநாதா! யேசுநாதா!
            ஊழிகாலம் வாழ்விப்பீர்.
            யேசுநாதா! யேசுநாதா!
            ஊழிகாலம் வாழ்விப்பீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு