18 May 2019

மேன்மேலும் நீர் தாரும்


59.     “More holiness give me”        (582)

1.         மேன்மேலும் நீர் தாரும்      
            நல்நம்பிக்கையும்
            மெய்யாம் விசுவாசம்
            அன்போடுண்மையும்.
            மேன்மேலுமே ஊக்கம்
            உற்சாகத்தையும்
            உண்டாக்கும் மெய்ப்பக்தி
            வைராக்கியமும்.

2.         மேன்மேலும் நீர்தாரும்
            மெய்ஞ்ஞானத்தையும்,
            உம்பேரிலே சாரும்
            சற்குணத்தையும்,
            மேன்மேலும் உண்டாக்கும்
            நற்சிந்தையையும்,
            ஆரருளை நாடும்
            மெய் வாஞ்சையையும்,

3.         மேன்மேலும் நீர்தாரும்
            சுத்தாங்கத்தையும்,
            மாசற்ற உள்ளான
            நல் ஸ்பாவத்தையும்,
            தீப்பாவத்தை வெல்லும்
            வல்லாவியையும்,
            தேவாவியால் வெற்றிக்
            கெம்பீரத்தையும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...