உம்மாலேயன்றி ரட்சகா
57. 'O
Christ, in Thee my soul bath found.'
1. உம்மாலேயன்றி,
ரட்சகா!
நான் நன்மை காண்கிலேன்,
மெய்ச்சமாதானம் இன்பமும்
வெறெங்கும் பெற்றிலேன்.
பல்லவி
வெறென்றினாலும் ரட்சகா!
மெய்ப்பாக்யம் அடையேன்.
உம்மாலேதான், என் ஆண்டவா!
சந்தோஷமாகிறேன்.
2. பேரன்பை உணராமலே
மெய்ப்பாக்யம் நாடினேன்.
நான் ஆவலோடே தேடியும்
ஏமாறிப் போயினேன்.
3. பூலோகப் பொருள் இன்பத்தைப்
பின்பற்றிப் போயினேன்.
சற்றேனும் அற்பவாழ்வினால்
நான் திருப்தியாகிலேன்.
4. இப்போதோ உந்தன் ரட்சிப்பைக்
கண்டிளைப்பாறினேன்.
ஆனந்தம் பொங்கி இன்பமாய்
நான் பாடிப்போற்றுவேன்.
Comments
Post a Comment