தேவா இவ்வீட்டில் இன்றே மேவி


தேவா இவ்வீட்டில் எழுந்து வரவே

370. (373) சங்கராபரணம்                                         ஆதி தாளம்

பல்லவி

          தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை
          செய்வாய், எமது கோவே!

சரணங்கள்

1.         மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள்
            முன்னவா, சத்ய வேதா!
            பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா,-யேசு
            புண்ணியனே, மா நீதா!-இங்கு
            நண்ணுவாய், மெய்ப் போதா;-தயை
            பண்ணுவாய், வினோதா!
            மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது,
            ஜீவனே, யேசு கோனே,-ஏழைப்
            பாவிகள் மீட்பன் தானே. - தேவா

2.         விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக,-அதி
            மேன்மையுடன் சிநேகம்
            அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக.-என்றும்
            அத்தனோ டுற வாக,-ஜெப
            துந்துமிகள் முழங்க,-ஐக்யம்
            பந்தமுடன் இலங்க,
            தந்தைப் பரனே, இன்று உன்றன் அருள் நிறைவாய்ச்
            சொந்தமுடன் ஈவாயே,-இவர்
            சந்ததம் வாழ நீயே. - தேவா

3.         இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே,-பரன்
            இஷ்டப்படி நடந்தே,
            அங்கம், மனது யாவும் பங்கம்இன்றித் தொடர்ந்தே,-இவர்
            அனுதினமும் மகிழ்ந்தே,-உயர்
            அம்பர வீட்டில் சேர்ந்து,-மிகு
            கெம்பீரமாக வாழ்ந்து,
            புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில்
            இங்கிதமாய்க் கொண்டாட,-நிதம்
            மங்களக் கவி பாட. - தேவா
- ச. யோசேப்பு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு