வந்தே கடைக்கண் பாருமேன்
கடைக்கண் பாருமேன்
368. (330)
சங்கராபரணம்
ஆதி தாளம்
பல்லவி
வந்தே கடைக்கண் பாருமேன்,-சர்வேசுரனே,
வந்தே கடைக்கண் பாருமேன்.
சரணங்கள்
1. வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி,
எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க. - வந்தே
2. கொள்ளை நோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே;
வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே! - வந்தே
3. எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ!
கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும்போக்க, - வந்தே
4. எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல்
எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை; சரணம், ஐயா! - வந்தே
5. மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்;
ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே? கண்பாருமேன். - வந்தே
6. எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்?
அந்தி, சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி. - வந்தே
7. வாரும், கருணாகரா; வந்தே கொள்ளை நோயதைத்
தீரும் இவ்வேளை தானே தீனர் எம்மீதினின்றே. - வந்தே
- ச. யோசேப்பு
இந்த பாடலுக்கான ஆடியோ கிடைக்குமா?
ReplyDeletehttps://drive.google.com/file/d/10uqnhdag1nBPoRg0XRLVPqJxdpM0APKt/view
Deleteஆடியோ கேட்டு மகிழ / பதிவிறக்கம் செய்ய மேல் உள்ள இணைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...!
https://drive.google.com/drive/u/0/folders/1LxVPdvzC2RV1pwVU4YJj7YUog-spBDgQ
Delete