09 May 2019

இயேசுவுக்கு நமது தேசத்தைச்


யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்க

371. பரசு                                                                ஆதி தாளம்

பல்லவி

                    யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்
                    பாசமாய் முயல்வோம், தாசரே!

அனுபல்லவி

            தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு
            வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி. - யேசு

சரணங்கள்

1.         கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை
            எங்குமே யேசுராஜா ஆளவே,-அவர்
            சிங்காரக்கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம்
            மங்காச் சந்தோஷ முற்று வாழவே, மன்னன். - யேசு

2.         வித்தை பூர்வீக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு
            மெத்தப் பேர்போன இந்து தேசமாம்;-இதில்
            சத்தியமாக வந்த நித்யர் யேசுவின் பரி
            சுத்த பரம ஞான ஜோதியாய்த் தோன்ற. - யேசு

3.         தீய மாமூல் வழக்கம் ஓய, வீண்பக்தி நீங்க,
            மாயக் கோட்பாடு முற்றும் மாறவே,-யேசு
            தூயன் சத்தியவேத ஞாயவிதிகள் உள்ளம்
            பாயநம் நாட்டார் குணமாகவே, வல்ல. - யேசு

4.         நம்மை வெறுத்து யேசுநாதனுக் கொப்புவித்துச்
            செம்மையுடன் உழைத்துச் சேவிப்போம்;-அவர்க்
            குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து
            நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும். - யேசு

- வே. சந்தியாகு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...