18 May 2019

அன்பின் சொரூபி இயேசு நிற்கிறார்

சு.கீ:45

To Download Txt Lyrics file

 

45.     "Come unto me: it is the Saviour's voice!"         (424)

 

1.       அன்பின் சொரூபி யேசு நிற்கிறார்

          என்னண்டை வா! என்றன்பாய் அழைப்பார்

            'தவித்துப்போன பாவி! சோர்வதேன்?'

            என்னண்டை வா! நான் ஆற்றித்தேற்றுவேன்.

 

                             பல்லவி

 

                   என்னண்டை வா! என்னண்டை வா!

                        என்னண்டை வா! நான் ஆற்றித்தேற்றுவேன்

                        ஆற்றித்தேற்றுவேன்... ஆற்றித்தேற்றுவேன்.

 

2.         துன்பத்தினால் பாடுண்ட நெஞ்சனே!

            உந்தன் விசாரம் நீக்க யேசுவே

            நின்றழைப்பார் இப்பாடும் நோவும் ஏன்?

            என்னண்டை வா! நான் வாழச் செய்குவேன்.

 

                             பல்லவி

                        என்னண்டை வா!... என்னண்டை வா!

                        என்னண்டை வா! நான் வாழச்செய்குவேன்

                        வாழச்செய்குவேன்... வாழச்செய்குவேன்

 

3.         நிர் மூட பாவி! சாவுக்கேதுவாய்

            துர்க்கிரியை செய்து, திகில் அடைந்தாய்;

            உன் பயம் நீங்கிச் சீருமாக்குவேன்,

            என்னண்டை வா நான் ஜீவன் ஈகுவேன்.

 

                             பல்லவி

 

                        என்னண்டை வா... என்னண்டை வா!

                        என்னண்டை வா! நான் ஜீவன் ஈகுவேன்

                        ஜீவன் ஈகுவேன், ஜீவன் ஈகுவேன்

 

4.         ஆறுதல், வாழ்வு, ஜீவன், மூன்றையும்

            அப்பாலே அன்று, ஈண்டும் இப்பவும்

            தயாளர் தந்து, ஏற்ற காலத்தில்

            பேரின்பம் ஈவார் மோட்ச வீட்டினில்,

 

                             பல்லவி

 

                   என்னண்டை வா!... என்னண்டை வா!

                        என்னண்டை வா! நான் ஆற்றித்தேற்றுவேன்

                        வாழச் செய்குவேன்... ஜீவன் ஈகுவேன்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...