அருள் ஏராளமாய் பெய்யும்


46.     "There shall be showers of blessing,"       (306)

1.       “அருள் ஏராளமாய் பெய்யும்”
            உறுதி வாக்கிதுவே,
            ஆறுதல் தேறுதல் செய்யும்
            சபையை  உயிர்ப்பிக்குமே.

பல்லவி

                        “அருள் ஏராளம்
                        அருள் அவசியமே;
                        அற்பமாய்ச் சொற்பமாயல்ல
                        திரளாய்ப் பெய்யட்டுமே,

2.         “அருள் ஏராளமாய்ப் பெய்யும்”
            மேக மந்தாரமுண்டாம்;
            காடான நிலத்திலேயும்
            செழிப்பும் பூரிப்புமாம்
                        அருள் ஏராளம் மி.

3.         “அருள் ஏராளமாய் பெய்யும்”
            யேசு! வந்தருளுமேன்!
            இங்குள்ள கூட்டத்திலேயும்
            கிரியை செய்தருளுமேன்!
                        அருள் ஏராளம். மி.

4.         “அருள் ஏராளமாயப் பெய்யும்”
            பொழியும் இச்சணமே!
            அருளின் மாரியைத் தாரும்
            ஜீவ தயாபரரே!
                        அருள் ஏராளம். மி.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு