சொற்பக் காலம் பிரிந்தாலும்
44. "God
be with you till we meet again!" (298)
1. சொற்பக் காலம்
பிரிந்தாலும் - பார்!
பின்பு ஏக சபையாக
கூடுவோம் ஆனந்தமாக.
அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.
பல்லவி
கூடுவோம்... கூடுவோம்...
யேசுவோடு வாழுவோம்;
கூடுவோம்... கூடுவோம்
அதுமட்டும் தேவன்
தாங்குவார்.
2. அது மட்டும் தேவன் தாங்குவார்;
மிக்க ஞானத்தால் நடத்தி
மோசமின்றியும் காப்பாற்றி,
அதுமட்டும் தேவன் தாங்குவார்.
3. அது மட்டும் தேவன் தாங்குவார்
சிறகாலே மூடிக்காத்து,
மன்னா தந்து போஷிப்பித்து,
அது மட்டும் தேவன் தாங்குவார்.
4. அது மட்டும் தேவன் தாங்குவார்;
துன்பம் துக்கம் நேரிட்டாலே,
கையில் ஏந்தி, அன்பினாலே
அது மட்டும் தேவன் தாங்குவார்.
5. அது மட்டும் தேவன் தாங்குவார்;
ஜெயக்கொடி பறந்தாடும்;
சாவும் தோற்றுப் பறந்தோடும்
அது மட்டும் தேவன் தாங்குவார்.
Comments
Post a Comment