சிறையின் கஷ்டம் கசப்பிலும்
43. "Out
of my bondage sorrow and night." (490)
1. சிறையின்
கஷ்டம் கசப்பிலும்
நின்றுவந்தேன்!
நீங்கிவந்தேன்!
முழு ஸ்வாதீனம் அடையவம்
ரட்சகரே! வந்தேன்.
பிணியினின்று சுகத்துக்காய்,
வறுமை நீங்கச் செல்வத்துக்காய்.
பாவத்தைவிட்டு ஆத்திரமாய்
ரட்சகரே! வந்தேன்.
2. இழிவு நஷ்டம் தவறினால்
நின்று வந்தேன்! நீங்கிவந்தேன்!
ரட்சிப்பின் லாபம் அடையவம்
ரட்சகதே! வந்தேன்.
துன்பத்தைவிட்டு இன்பத்துக்காய்,
துயரத்தைவிட்டு சாந்தத்துக்காய்,
இகழ்ச்சி நின்று மகிழ்ச்சிக்காய்,
ரட்சகரே! வந்தேன்.
3. மருளுகின்ற ஸ்திதியிலும்
நின்றுவந்தேன்! நீங்கி வந்தேன்
தேவரீர் சித்தம் அறியவும்
ரட்சகரே! வந்தேன்.
ஆபத்தினின்று சம்பத்தையும்,
தாழ்வினை விட்டு வாழ்வினையும்,
கண்டடைவேன் இந்நேரத்திலும்,
ரட்சகரே! வந்தேன்.
4. மரணக்கொடி பயத்திலும்
நின்றுவந்தேன்! நீங்கி வந்தேன்
நேசரின் வீட்டில் மகிழவும்
ரட்சகரே! வந்தேன்!
நாசத்தைவிட்டு ஜீவனுக்காய்,
மோசத்தினின்று மோட்சத்துக்காய்,
திருச்சமுகத் தின்பத்துக்காய்
ரட்சகதே! வந்தேன்.
Comments
Post a Comment