09 May 2019

ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்

கி.கீ:393

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்

 

393. ஸ்ரீரஞ்சினி                                              சாபு தாளம்

 

                             பல்லவி

 

          ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்

            தூண்டும் உன் ஆவி அருள்வாய்.

 

                             அனுபல்லவி

 

                        என்னைத் தியாகிக்க ஏவும்

                        உன் அனல் மூட்டிடுவாய்,

                        இந்நிலம் தன்னில் மாளும்

                        மனுமக்கள் மீட்பிற்காக. - ஆண்டவா

 

                             சரணங்கள்

 

1.         புசிக்கக் பண்டமில்லாமல்

            பூவில் இல்லமுமே அன்றி,

            நசித்து நலிந்து நாட்டில்

            கசிந்து கண்ணீர் சொரிந்து,

            தேச மெல்லாம் தியங்கும்

            நேசமக்கள் சேவைக்கே,

            நிமலா, எனை ஏற்றுக்கொள். - ஆண்டவா

 

2.         வறுமை வன் கடன் வியாதி,

            குருட்டாட்டம் கட்டி கடும்

            அறிவீனம் அந்தகாரம்

            மருள் மூடி மக்கள் வாடும்,

            தருணம் இக்காலமதால்,

            குருநாதா, உனதன்பை

            அருள்வாய், அடியேனுக்கே. - ஆண்டவா

 

3.         அருமை ரட்சகா, உன்றன்

            அரும்பாடு கண்ணீர் தியாகம்,

            பேரன்பு பாரச் சிலுவை,

            சருவமும் கண்ட என்றன்

            இருதயம் நைந்துருகி,

            வெறும் பேச்சாய் நின்றிடாமல்

            தருணம் எனையே தந்தேன். - ஆண்டவா

 

4.         உலகே உனதாயினும்

            தலைசாய்க்கத் தாவில்லாமல்,

            நலமே புரிந்து திரிந்தாய்;

            எல்லாம் துறந்து யான் உன்

            நல்லாவி கொண்டுழைக்க,

            வல்லா, உனின் சிலுவை

            அல்லால் வழி வேறுண்டோ? - ஆண்டவா

 

 

- சவரிராயன் ஏசுதாசன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...