எந்நாளுந் துதித்திடுவீர் அந்த
Benedictus-எந்நாளுந் துதித்திடுவீர்
392. (380) சுருட்டி ஆதி
தாளம்
பல்லவி
எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்த
இசர வேலின் ஏகோவா வைநீர்
அனுபல்லவி
இந்தநற்
சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,
விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. - எந்நாளுந்
சரணங்கள்
1. கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமை
கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
கெம்பீர மாகச் சொல்லவும்,
சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,
கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா. - எந்நாளுந்
2. தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்
தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
தாசன்தா வீது வம்வசத்து
இன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,
இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று. - எந்நாளுந்
3. அந்தகாரத்திலிருப்போர்-சாவின்
ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்
அங்குபிர காசமடைந்து
அந்தச மாதான உந்தரங்[1] கண்டிட
ஆதித்தன் தோன்றிளார் ஜாதிக ளேநீர், - எந்நாளுந்
4. விந்தைப்பி தாவர்க்கும்-ஏக
வித்தான யேசு ரக்ஷக னார்க்கும்
வீவிலா[2] ஆவியவர்க்கும்
சந்ததம் மகிமை சந்ததமென்று
சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி. -
எந்நாளுந்
-
ச.த. ஞானமணி
Comments
Post a Comment