அருளே பொருளே ஆரணமே
துதியுனக் கொருகோடி
394. (392) குரஞ்சி ஆதி
தாளம்
1. அருளே! பொருளே!
ஆரணமே[1] அல்லும்பகலுந்துணை நீயே;
இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந்
தொடராமல்,
மருண்டு மனது பிறழாமல்,[2] வஞ்சத்தொழிலிற்
செல்லாமல்,
கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந்[3] துதியுனக்
கொருகோடி. - சுவாமி ஒரு கோடி,
2. சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்குச்
செய்துவந்த
நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய[4] தயைகளுக்கும்,
என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத்
தாழ்ந்து
கன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக்
கொருகோடி. - சுவாமி ஒரு கோடி,
3. பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!
வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா[5] வான்
பொருளே!
பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே
சுகித்திருக்கக்
கற்றில்லாத மிகச் சிறியேன் கழறுந்தியுனக்
கொருகோடி. - சுவாமி ஒரு கோடி,
4. பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தேயென்றும் வாழ்ந்திருக்க,
நத்தும்[6] இரவு
முழுதனைத்தும்நாதா என்னைக்காத்தருளி,
முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன்
தன்னைச்சேர்க்கக்
கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக்
கொருகோடி. - சுவாமி ஒரு கோடி,
-
ஐ.த. எலியேசர்
Comments
Post a Comment