18 May 2019

மங்கல வார்த்தை சீக்கிரமாய்

மங்கல வார்த்தை சீக்கிரமாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

28.     'Jesus is coming, sing the glad word!'    (178)

 

1.       மங்கல வார்த்தை! சீக்கிரமாய்

                   மானத்தில் தோன்றி மெய்ப் பக்தருக்காய்

            ஆளுகை செய்வார் மகத்துவமாய்,

                        யேசு வந்தருளுவார்.

 

                             பல்லவி

 

            மங்கல வார்த்தை! வந் தருளுவார்,

                        யேசு வந்தருளுவார்.

            செய்தியைக் கூறும் எத்திசையிலும்,

                        யேசு வந்தருளுவார்.

 

2.         மங்கல வார்த்தை! மரித்தோரும்

                        ஜீவனோ டெழுந் தாகாசத்திலும்

            ஏறி ஏகோபித்தானந்திக்கவும்,

                        யேசு வந்தருளுவார்.

 

3.         மங்கல வார்த்தை! மாவாழ்வடைவோம்;

                        தீங்கணுகாமலும் ஓய்ந்திருப்போம்,

            பாவமும் துக்கமும் ஒழிந்துபோம்

                        யேசு வந்தருளுவார்.

 

4.         மங்கல வார்த்தை! மெய்வாக்கிதுவே!

                        மீட்பரை நேசிக்கும் தாசர்களே!

            பூரிப்புண்டாகும் அத்தினத்திலே,

                        யேசு வந்தருளுவார்.

 

 

YouTube Link


பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...