18 May 2019

தயாபரா கண்ணோக்குமேன்


29.     'Jesus, my Lord, to Thee I cry'         (476)

1.         தயாபரா! கண்ணோக்குமேன்!
            உம்மாலேயன்றி சாகுவேன்,
            என் சீரில்லாமை பாருமேன்!
            என் பாவம் நீக்குமேன்!

பல்லவி

                        என் பாவம் நீக்குமேன்!
                        என் பாவம் நீக்குமேன்!
                        உம் ரத்தமே என் கதியே!
                        என் பாவம் நீக்குமேன்!

2.         என் பாவ ஸ்திதி அறிவீர்,
            மாசற்ற ரத்தஞ் சிந்தினீர்,
            சீர்கேட்டை யெல்லாம் மாற்றுவீர்
            என் பாவம் நீக்குமேன்!

3.         மெய்ப்பக்தி ஒன்றுமில்லையே!
            நற்கிரியை வீண் பிரயாசையே!
            உம் ரத்தத்தின் நிமித்தமே
            என் பாவம் நீக்குமேன்!

4.         இதோ! நற்பாத மண்டினேன்.
            தள்ளாமற் சேர்த்துக்கொள்ளுமேன்!
            என்றைக்கும் பாதுகாருமேன்,
            என் பாவம் நீக்குமேன்!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...