09 May 2019

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே


எங்கும் புகழ் யேசு ராசனுக்கே

397. கரகரப்ரியை                                           ஆதி தாளம்

பல்லவி

                   எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
                   எழில் மாட்சிமை வளர் வாலிபரே!

அனுபல்லவி

            உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்,
            உயர்வீரரெனப் பக்தர் ஓதுகிறார். - எங்கும்

சரணங்கள்

1.         ஆயிரத் தொருவர் ஆவிரல்லோ நீரும்
            அதை அறிந்து துதி செய்குவீர்;
            தாயினும் மடங்கு சதம் அன்புடைய
            சாமி யேசுவிக்கிதயம் தந்திடுவீர். - எங்கும்

2.         கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
            கடன்பட்டவர்கள் கண்திறக்கவே;
            பல்வழி அலையும் பாதைதப்பினோரைப்
            பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர். - எங்கும்

3.         தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
            தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
            பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
            பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? - எங்கும்

4.         சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
            தூதர் நீங்களே தூயன்வீரரே;
            கர்த்தரின் பாதத்தில் காலைமாலை தங்கிக்
            கருணை நிறை வசனம் கற்றிடுவீர். - எங்கும்

- ல. பொன்னுசுவாமி

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...