இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
இமயமும் குமரியும்
398. (“ஜன கண மன” என்ற இசை)
1. இமயமும் குமரியும்
எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
நெஞ்சார் அன்பின் தியாகசேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா!
சமாதானம் யேசுவின் வீடே,
சகலர்க்கும் சாந்தி எம் நாடே,
சாந்தி இதற்கில்லை ஈடே,
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே!
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!
2. உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவே
ஓங்கிய வர்த்தகம் தாங்கப்,
பொய்யா மொழி மாகாணத்தலைவர்
புருஷோத்தம மந்திரிகள்
நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
நட்புடன் கருணை இலங்கப்
பணிவிடை நேர்மை அருளே,
பரனர செனப் பகர் தெருளே,
பாரதம் போற்றும் மெய்ப் பொருளே!
இமயமும் குமரியும் எல்லைக் கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே!
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!
-
சா.ஜா. நல்லையா
Comments
Post a Comment