கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக்


கிறிஸ்தவ இல்லறமே

396. காம்போதி                                              சாபு தாளம்

பல்லவி

                        கிறிஸ்தவ இல்லறமே-சிறந்திடக்
                        கிருபை செய்வீர், பரனே!

அனுபல்லவி

            பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
            பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல. - கிறிஸ்தவ

சரணங்கள்

1.         ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
            திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
            சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
            சுத னேசு தலைமையில் தூய வீடாகவும். - கிறிஸ்தவ

2.         ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
            உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம் போல,
            நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி
            நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக். - கிறிஸ்தவ

3.         அன்போடாத்துமதாகம் அரிய பரோபகாரம்
            அருமையாக நிறைந்த அயலார்க் கொளி விளக்காய்த்
            துன்பஞ் செய்கிற பல தொத்து வியாதிகளைத்
            தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து - கிறிஸ்தவ

4.         மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
            மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
            கலை உடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
            கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் - கிறிஸ்தவ

- ல. பொன்னுசுவாமி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு