என் ஜீவன் போகும் நேரம்


17.     'The sands of time are sinking'        (975)

1.        என் ஜீவன் போகும் நேரம்
                        சமீபம் வந்ததே!
            பேரின்ப அருணோதயம்,
                        இதோ! உதித்ததே.
            ராக்காலம் மோசம் நீங்கும்
                        விண் சுடரொளியில்;
            மா அருள் ஜோதி வீசும்
                        பேரின்ப தேசத்தில்.

2.         சாரோனின் ரோஜா புஷ்பம்
                        சுகந்தம் மணமும்
            விண் சோலை எங்கும் வீசி,
                        என்றைக்கும் கமழும்
            அங்கேறிச் சுகிப்பேனே
                        வானாதி வானத்தில்
            மா அருள் ஜோதி வீசும்
                        பேரின்ப தேசத்தில்.

3.         ஆ நேச ஜீவ ஊற்று!
                        என் அருள் நாதரே!
            ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர்
                        அங்காழி போலாமே.
            பேரன்பின் பெருவெள்ளம்
                        பாய்ந்தோடும் மோட்சத்தில்
            மா அருள் ஜோதி வீசும்
                        பேரின்ப தேசத்தில்.

4.         அன்போடும் நீதியோடும்
                        என் சுக துக்கமும்
            ஆண்டென்னைப் பாதுகாத்து
                        வந்தார் எந்நேரமும்.
            ஆ! போற்றுவேன் தெய்வன்பை,
                        விண் வாசஸ்தலத்தில்;
            மா அருள் ஜோதி வீசும்
                        பேரின்ப தேசத்தில் .

5.         நல்நித்திரை செய்து, பின்பு
                        மாசற் றெழும்புவேன்.
            என் மீட்பரை நான் கண்டு
                        ஆனந்தங் கொள்ளுவேன்
            ராஜாதிராஜன் என்னை
                        அழைக்கும் நேரத்தில்,
            மா அருள் ஜோதி வீசும்
                        பேரின்ப தேசத்தில்.

6.         தன் ஆடையைப் பாராமல்
                        பர்த்தாவின் முகத்தை
            பத்தினி நோக்குமாறு,
                        நான் ஜீவக்ரீடத்தை
            நோக்காமல், மீட்பர் மாண்பைப்
                        பார்ப்பேன் அவ்வேளையில்.
            இம்மானுவேலே ஜோதி
                        பேரின்ப தேசத்தில்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு