முயல்வோம் முயல்வோம் தேவ ஊழியரே


16.     'To the work! To the work! we are servants of God'  (751)

1.         முயல்வோம்! முயல்வோம்! தேவ ஊழியரே;
            செல்லுவோம் யேசுநாதர் நற்பாதையிலே.
            மிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்;
            வல்ல ஆவியின் பெலனை அருளுவார்.

பல்லவி

                        முயல்வோம்... முயல்வோம்,
                        முயல்வோம்... முயல்வோம்,
                        நம்புவோம்... நாடுவோம்,
                        நல் மீட்பர் வருமளவும்.

2.         முயல்வோம்! முயல்வோம்! சுவிசேஷகரே!
            காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே
            பாவ நாச விசேஷத்தைப் பகரவும்,
            ப்ராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும்.

3.         முயல்வோம்! முயல்வோம்! விசுவாசிகளே!
            கூறுவோம் கிறிஸ்துவின் ராஜரீகத்தையே
            அந்தகாரத்தின் க்ரியைகள் நொறுக்குவார்;
            பரலோக பேரின்பத்தை நாட்டுவிப்பார்.

4.         முயல்வோம்! முயல்வோம்! தேவதாசர்களாய்
            சேருவோம் மோக்ஷலோகம் மகத்துவமாய்
            அந்த லோகத்தின் ஜோதியில் ஆனந்திப்போம்;
            சுகவாழ்வும் சந்தோஷமும் கண்டடைவோம்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே