சுக காலம் என்கிலும்
18. 'Simply
trusting every day'
1. சுக காலம்
என்கிலும்,
துக்கமானபோதிலும்
நெறிநின்று தவறேன்.
நித்தம், நித்தம், நம்புவேன்.
பல்லவி
வாழ்விலும் மா தாழ்விலும்,
கஷ்ட நஷ்டம் ஆகிலும்,
யேசுவைப் பின்பற்றுவேன்.
நித்தம், நித்தம், நம்புவேன்.
2. என்தன் வெறும் நெஞ்சத்தில்
தூய ஆவி விளங்கில்,
அவராலே செல்லுவேன்,
நித்தம், நித்தம், நம்புவேன்.
3. இன்பம் ஆகில் பாடுவேன்,
துன்பத்தில் மன்றாடுவேன்,
மோசம் நேரில் அஞ்சிடேன்,
நித்தம், நித்தம், நம்புவேன்.
4. ஜீவகாலம் முழுதும்,
சாவுபரியந்தமும்,
மோட்சம் நாடிச் செல்லுவேன்,
நித்தம், நித்தம், நம்புவேன்.
Comments
Post a Comment