வெள்ளை அங்கிகள் தரித்த


விமல முத்தர் இவர் யார்?

327. கன்னடா                                                          ஆதி தாளம்
பல்லவி

                             வெள்ளை அங்கிகள் தரித்த
                             விமல முத்தர்[1] இவர் யார்?

அனுபல்லவி

                        கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக்
                        கருணைவள்ளல்[2] முன்நிற்கும். - வெள்ளை

சரணங்கள்

1.         நானாதிக்கிலுமிருந்து
            நயந்து வந்தவர் இவர்;
            கோணாது துன்பக் கடலில்
            குளித்துவந்தவர் இவர். - வெள்ளை

2.         குருத் தோலைகள் பிடித்துக்
            கொற்றவனைச்[3] சூழநிற்கும்
            பெருத்த கூட்டத்தார் இவர்;
            பேரன்பின் அடியார்களாம். - வெள்ளை

3.         ஆட்டுக் குட்டியாலே மீட்பை
            அடைந்த உத்தமர் இவர்;
            தேட்டமுடனே[4] நாயனைச்
            சேவித்து நிற்கின்றார் நித்தம். - வெள்ளை

4.         பசிதாகம் யாவுமற்றார்;
            பாக்கிய நிலைமை பெற்றார்;
            உச்சித மோட்சத்தின் கண்ணீர்
            உகுக்கா[5] வாழ்வினை யுற்றார். - வெள்ளை

- ல.ஈ. ஸ்தேவான்


[1] முக்தர்
[2] கடவுள்
[3] அரசனை
[4] விருப்பத்துடன்
[5] விடாத

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு