பக்தருடன் பாடுவேன் பரம சபை


பக்தருடன் பாடுவேன்

328. கேதாரகௌளம்                                       சாபுதாளம்
பல்லவி

                   பக்தருடன் பாடுவேன்-பரம சபை
                   முக்தர் குழாம் கூடுவேன்.

அனுபல்லவி

            அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
            இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான். - பக்த

சரணங்கள்

1.         அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
            அன்பர் என் இன்பர்களும்,?
            பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
            என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய். - பக்த

2.         இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்-கு
            அகமும் ஆண்டவன் அடியே,
            சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
            இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே - பக்த

3.         தாயின் தயவுடையதாய்த் தமியன்[1] நின்
            சேயன் கண் மூடுகையில்,
            பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
            தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள். - பக்த

- சவரிராயன் ஏசுதாசன்


[1] தனித்தவன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு