தேவ லோகமதில் சேவிப்பார் தூயவர்கள்
தேவ லோகமதில்
326. கமாஸ் ஆதி
தாளம்
பல்லவி
தேவ லோகமதில்
சேவிப்பார் தூயவர்கள்.
அனுபல்லவி
மாவலராகிய
தேவன்றன் பலத்தால்-ரீ
பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார்.
- தேவ
சரணங்கள்
1. வானமண்டலப் பொல்லா ஆவியின் சேனையோடும்-பல
மான துரைத்தனம், அதிகாரம், பிரபஞ்ச அதிபதியிவர்களோடும்
ஞானமாய்த் தேவ சர்வாயுதம் தரித்து,-ரீ-
நலமுடன் போராடி உலகினில் ஜெயங் கொண்டார்.
- தேவ
2. பட்டயம், நிர்வாணம், பசி, நாச மோசங்களும்,-மா
பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம், பஞ்சமும்
மிஞ்சி வந்தும்,
துட்டர்கள் கிட்டினும் மட்டில்லா அன்பரால்-ரீ-
துணிவுடன் முற்றிலும் ஜெயித்த விசுவாசிகள்.
- தேவ
3. பாரத்தையும், தமை நெஞ்கிய பாவத்தையும்,-தள்ளிப்
பட்சமுறும் யேசுரட்சகர்மீது தம் பார்வையை
வைத்து என்றும்
வீரமாய் ஓடியே வெற்றி சிறந்தவர்,-ரீ-
வேகும் அக்கினியின் உக்கிரம் அவித்தவர்.
- தேவ
4. ஜெயங் கொள்ளுவோர் பரதீசினில் வீற்றிருப்பார்,-வாடா
ஜீவகிரீடம் அணிந்தாளுகை செய்வார், ஜீவகனி
புசிப்பார்,
வியப்புறு புது நாமம், வெள்ளுடை பெற்றுமே-ரீ-
விடிவெள்ளியாய் நித்யம் விளங்கி ஜொலித்திடுவார்.
- தேவ
-
வே. சந்தியாகு
Comments
Post a Comment