தேவனே கண்ணோக்குமேன்


74.     “Heavenly Father, bless me now”   

1.         தேவனே! கண்ணோக்குமேன்;
            ஜீவன் வேண்டி நிற்கிறேன்;
            அன்பாய்ச் சேர்த்து ரட்சியும்,
            என்னை ஆசீர்வதியும்.

பல்லவி

                   என்னையும், என்னையும்
                        என்னை ஆசீர்வதியும்.

2.         நல்ல வார்த்தை சொல்லுமேன்;
            வல்ல கையை நீட்டுமேன்;
            வந்த ஏழையேனையே
            சந்தியும் இந்நேரமே.

3.         கெஞ்சிக் கேட்டு நிற்கையில்,
            தஞ்சம் தேடும் எந்தனில்
            ஜீவன் தந்து உயிர்ப்பியும்,
            பாவம் நீக்கி ரட்சியும்.

4.         உந்தன் மைந்தன் நீதியே
            நம்பி வந்த பாவியை
            தூயனே! நீர் தேற்றுவீர்;
            தூயனே; ஆட்கொள்ளுவீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு