18 May 2019

என் முன்னே தேவன் போகிறார்


73.     'He leadeth me O blessed though'              (542)

1.         என் முன்னே தேவன் போகிறார்;
            நன் மேய்ப்பராகக் காக்கிறார்;
            ஓர்காலும் என்னைக் கைவிடார்;
            நேர் பாதை காட்டிப் போகிறார்.

பல்லவி

                         முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!
                         என் முன்னே சென்று போகிறார்!
                         நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்,
                         அன்போடு பின்சென் றேகுவேன்.

2.         கார் மேகம் வந்து மூடினும்,
            சீர் ஜோதி தோன்றி வீசினும்,
            என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்;
            என்றைக்கும் முன்னே போகிறார்.

3.         மெய்ப்பாதை காட்டி! பின்செல்வேன்,
            தெய்வீக கையால் தாங்குமேன்;
            எவ்விக்கினம் வந்தாலும் நீர்
            இவ்வேழை முன்னே போகிறீர்.

4.         ஒப்பற்ற உம் காருண்யத்தால்
            இப்பூமி பாடு தீருங்கால்,
            நீர் சாவை வெல்லச் செய்குவீர்,
            பேரின்பம் காட்டி முன் செல்வீர்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...