விருந்தைச் சேருமேன்


20.     'Come! for the feast is spread'       

1.        விருந்தைச் சேருமேன்,
                        அழைக்கிறார்!
            ஆகாரம் பாருமேன்,
                        போஷிப்பிப்பார்;
            தாகத்தைத் தீர்க்கவும்,
                        யேசுவின் மார்பினில்
            சாய்ந்திளைப்பாறவும்,
                        வா! பாவி! வா!

2.         ஊற்றண்டை சேரவும்,
                        ஜீவனுண்டாம்.
            பாடும் விசாரமும்
                        நீங்கும் எல்லாம்!
            நம்பி வந்தோருக்கு
                        த்ருப்தி உண்டாயிற்று
            ஜீவாற்றின் அண்டைக்கு
                        வா! பாவி! வா!

3.         மீட்பரின் பாதமும்
                        சேராவிடில்
            தோல்வியே நேரிடும்
                        போராட்டத்தில்.
            யேசுவே வல்லவர்;
                        யேசுவே நல்லவர்,
            யேசுவே ஆண்டவர்.
                        வா! பாவி! வா!

4.         மோட்ச பாதையினில்
                        முன் செல்லுவாய்.
            சிற்றின்ப வாழ்வினில்
                        ஏன் உழல்வாய்?
            வாடாத கிரீடமும்
                        ஆனந்தக் களிப்பும்
            மெய்வாழ்வும் பெறவும்
                        வா! பாவி! வா!

5.         சேருவேன், யேசுவே!
                        ஏற்றுக்கொள்வீர்.
            பாவமும் அறவே
                        சுத்தஞ்செய்வீர்.
            அப்பாலே மோட்சத்தில்,
                        ஆனந்தக் கடலில்
            மூழ்கிப்பேரின்பத்தில்
                        கெம்பீரிப்பேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு