எத்தேசத்திலேயும் ப்ரசங்கித்தே
19. 'Oh,
where are the reapers that garner in' (749)
1. எத்தேசத்திலேயும்
ப்ரசங்கித்தே
கற்கதிரைச்
சேர்ப்பாருண்டோ, இன்றே?
கையாடிய கத்தி மெய்யறிவாம்,
களஞ்சியமும் மோட்சலோகமாம்.
பல்லவி
கொய்வார் எங்கே? சகாயர் யார்?
அவசரமான திந்த வேலை! பார்!
க்ராமந்தோறும் ப்ரசங்கித்தே
நற்கதிரைச் சேர்ப்பா ருண்டோ,
இன்றே?
2. விசேஷித்த ஸ்தலத்துச் சந்தைக்கும்,
சாதாரண ஜனத்தின் வீதிக்கும்,
எவ்வருணத்தாரினிடத்திற்கும்
சென்றே சுவிஷேசத்தைக் கூறவும்,
கொய்வார் மி.
3. எத்திசையிலும் விளைவாகுதே,
இப்போதறுத்தால் பலன் காண்போமே,
இவ்வேலையும் ஜாஸ்தி! நீர் தீவிரியும்!
ராக்காலமும் சீக்கிரம் வந்திடும்!
கொய்வார் மி.
4. சகோதரர் யாவரும் வாருங்கள்,
உற்சாக சந்தோஷமாய்ச் சேருங்கள்,
நற்பலனைக்கண்டு கெம்பீரிப்போம்,
ஆதாய மானந்தமும் அடைவோம்.
கொய்வார் மி.
Comments
Post a Comment