18 May 2019

காது குளிரப் பாடுங்கள்


21.     'Sing them over again to me'  (357)

1.         காது குளிரப் பாடுங்கள்
                        கிருபா சத்தியம்,
            புத்திதெளியக் காட்டுங்கள்
                        திவ்விய வசனம்
            வெல்க! சத்திய வேதம்,
                        வாழ்க! நித்திய வேதம்.

பல்லவி

                        அமிர்தமே! அற்புதமே!
                        திவ்விய சத்தியம்
                        அமிர்தமே! அற்புதமே!
                        திவ்விய சத்தியம்.

2.         நல்ல செய்தியைக் கூறுமேன்
                        கிருபா சத்தியம்,
            பாவநாசத்தைக் காட்டுமேன்
                        திவ்விய வசனம்
            வான வருஷமாறி,
            ஞான பொக்கிஷவாரி,
                        அமிர்தமே! மி.

3.         வேத நாயகர் பொழியும்
                        கிருபா சத்தியம்.
            ஜீவ மங்கல மொழியும்
                        திவ்விய வசனம்.
            யேசு! எந்தனைப் பாரும்
                        நித்தம் எந்தனைக் காரும்.
                                    அமிர்தமே! மி.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...