ஐயனே இவர்க் காசி ஈகுவாய்


ஐயனே! இவர்க்கு ஆசி ஈகுவாய்

303. (302) செஞ்சுருட்டி                                 ருபகதாளம் 
பல்லவி

            ஐயனே! இவர்க் காசி ஈகுவாய்,
            மெய்யாய் உன்னைச் சார-என்றும்

அனுபல்லவி

            பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு,
            மெய்யாய் உன்னைச் சார-என்றும் - ஐயனே!

சரணங்கள்

1.         பாவ முஞ்செக சால மும்விட்டுப்
            பனுவ லிரைப்[1] படியே,-வெகு
            ஆவ லாயுன தருளி னாலுயிர்
            அடையக் கதி யடைய-என்றும் - ஐயனே!

2.         நற்று தி[2] செயும் பத்த ராயுன்றன்
            பொற்றா ளிணை[3] போற்றி!-ஓங்கு
            சற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்
            சான்றோர் நெறிசார-என்றும் - ஐயனே!

3.         இன்று தொட்டிவர் என்று மேயுனைச்
            சென்றே எங்குங் கூறிப்,-பயன்
            நன்றி பெற்றுயர் வென்றி யுற்றினி
            ஒன்றி யுயர்ந்த தோங்க-என்றும் - ஐயனே!

4.         அன்று சீடராய்ப் பன்னி ருவரை
            அழைத்தாய், தயை விழைத்தாய்;-இவர்
            என்றுஞ் சபையில் ஒன்றி வைகிட[4]
            நின்றுன் கிருபை ஈவாய்-என்றும் - ஐயனே!


[1] வேதவுரை
[2] நல்துதி
[3] அழகிய இரு பாதங்கள்
[4] இருக்க

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு