பரிசுத்தாவி நீர் வாரும்


திடப்படுத்தல் பெறுவோர்க்கு அருள்தாரும்

304. (303) யமுனாகல்யாணி                                      ஆதிதாளம்
பல்லவி

            பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்
            படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று

அனுபல்லவி

            அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே
            ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. - பரி

சரணங்கள்

1.         செயல்குண வசனத் தீதுகள் போக,
            திருச்சபை யதிலிவர் பூரணராக,
            ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,
            ஜெபதப தியானஞ் செய்வதற்காக. - பரி

2.         நற்கருணைதனை நலமுடன் வாங்க,
            நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,
            சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,
            சகல தீதான பேதங்களும் நீங்க. - பரி

3.         அஞ்ஞானங்க ளோடிவர் சமர்[1] புரிய,
            அருண்மறை யதினாழங் களையறிய,
            நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய,
            நின்னடியாரிவ ரென்பது தெரிய. - பரி

4.         பக்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய,[2]
            பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய,
            நித்தமுங் கிருபையின் கனி கொய்ய,
            நிலைவரமாய் இவராவியில் துய்ய. - பரி
5.         தினமறை யோதி ஜெபித்து மன்றாட,
            திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட,
            உணர்வோடு தொழுது கீதங்கள் பாட,
            உள்ளந் திருந்து ஜீவாறுகளோட. - பரி

- ச.பே. ஞானமணி


[1] போர்
[2] பிழைக்க

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு