ஞானஸ்நான மா ஞானத்திரவியமே


ஞானஸ்நான மா ஞானதிரவியமே

302. (301) காம்போதி                                              ஆதிதாளம்

பல்லவி

            ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திரு
            நாமம் ஜலமோடு சேர்.

சரணங்கள்

1.         வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு
            வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட,
            ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க,
            நல்ல தேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற - ஞான

2.         தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவே
            சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து
            சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள்[1] பூரியர்கள்[2]
            செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில்[3] வேதமுறை - ஞான

3.         கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக்
            கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்!
            அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை
            அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள் - ஞான
- ஞா. சாமுவேல்


[1] சிறந்தவர்கள்
[2] கீழ் மக்கள்
[3] ஸ்நானத்தில்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு