எந்நாளு மேதுதிப்பாய் என்னாத்துமாவே
எந்நாளுமே துதிப்பாய்
360.
பியாகு. சாபு
தாளம்
பல்லவி
எந்நாளு மேதுதிப்பாய்-என்னாத்துமாவே, நீ
எந்நாளு
மேதுதிப்பாய்!
அனுபல்லவி
இந்நாள்
வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா
நன்மைகள் யாவு மறவாது. - எந்நாளுமே
சரணங்கள்
1. பாவங்கள்
எத்தனையோ,-நினையா திருத்தாருன்
பாவங்கள்
எத்தனையோ?
பாழான
நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில்
வைத்த மகா தய வைஎண்ணி - எந்நாளுமே
2. எத்தனையோ
கிருபை,-உன்னுயிர்க்குச் செய்தாரே,
எத்தனையோ
கிருபை?
நித்தமுனைமுடி
சூட்டினதுமன்றி,
நேயமதாக
ஜீவனை மீட்டதால். - எந்நாளுமே
3. நன்மையாலுன்
வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன்
வாயை;
உன்வயது
கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு
இளமைபோ லாகவே செய்ததால், - எந்நாளுமே
4. பூமிக்கும்
வானத்துக்கும்-உள்ள தூரம் போலவே,
பூமிக்கும்
வானத்துக்கும்,
சாமி
பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும்
தங்குமே, சத்திய மேயிது. - எந்நாளுமே
5. மன்னிப்பு
மாட்சிமையாம்-மாதேவனருளும்
மன்னிப்பு
மாட்சிமையாம்;
எண்ணுவாயோ
கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில்
உன்பாவம் அகன்றதத்தூரமே. - எந்நாளுமே
6. தந்தைதன்
பிள்ளைகட்கு-தயவோ டிரங்கானோ
தந்தை
தன் பிள்ளைகட்கு?
எந்த
வேளையும் அவரோடு தங்கினால்,
சொந்தம்
பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே; - எந்நாளுமே
- சா. பரமானந்தம்
Comments
Post a Comment