பாரும் பாரும் ஐயா எனை அன்பாகப்


எனை அன்பாகப் பாரும்

361. (323) ஆனந்தபைரவி                              ஆதி தாளம் 
பல்லவி

                   பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப்
                   பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு,

அனுபல்லவி
            பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா,
            பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா - பாரும்

சரணங்கள்

1.         பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
            தேவ திருக் கணையே,[1]-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே!
            பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும்,
            போதக நாயனே, மாதவ தூயனே,
                        கோதறும்[2] ஆயனே; ஆதியின் சேயனே! - பாரும்

2.         ஞாலந்தனில்[3] இருளை-அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே,-அடியர்கட்கனு
            கூலம் நிறைதெருளே[4],-மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
            காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
            காரண நேசனே, ஆரண[5] வாசனே,
            பூரண ராசனே, தாரணி, ஈசனே. - பாரும்

- தேவசகாயம் எழுத்தர்


[1] அம்பு
[2] குற்றமற்ற
[3] பூமியில்
[4] ஞானமே
[5] வேதம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு