06 May 2019

தேவனே யேசு நாதனே இத்


தேவனே ஆலயம் வந்திடும்

317. (316) கமாஸ்                                சாபு தாளம்

பல்லவி

            தேவனே, யேசு நாதனே, இத்
            தேவ ஆலயம் வந்திடும்;
            தேவ ஆலயம் வந்தவர்க் கருள்
            திவ்ய ஆவியை ஈந்திடும்.

சரணங்கள்

1.         பாவிகள் உமக்காலயஞ் செய்யப்
            பாத்திரர்களோ? அல்லவே;
            பாவநாசராம் யேசுவே உம்மால்
            பாத்திரராய் இதைச் செய்தனர். - தேவனே

2.         கூடிவந் தும்மையே பணிந்திடக்
            குறித்த இச்சிறு ஆலயம்
            நாடி வந்தவர் யாவருக்குமுன்
            நல்வசன முளதாகவும். - தேவனே

3.         தேவனே, உமக்கான ஆலயம்
            பாவியின் சிறு நெஞ்சமே;
            பாவம் யாவையும் நீக்கியே சிறு
            தேவ ஆலய மாக்கிடும். - தேவனே

- ச. தாவீது

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...