மாமனோகரா இவ்வாலயம் வந்தருள் கூரும்


இவ்வாலயம் வந்தருள் கூரும்

316. (315) சங்கராபரணம்                      ஆதி தாளம் 
பல்லவி

           மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும்,
           மாமனோகரா! பராபரா!

சரணங்கள்

1.         பூமியாளும் நாதனே, நரர்
            போகம் நாடும் நீதனே!
            நாமே வாழ்த்தும் தாசர் நடுவில்
            தாமதம் இல்லாமல் எழுந்தருள்! - மா

2.         நாதனே, இவ்வாலயத்தை
            நலமாய்த் தந்தாய் தாசர்க்கே;
            பாதம் போற்றி வாழ்த்துவோம்; குரு
            பரனே, பராபரா, தினம். - மா

3.         நின் திருத்தயை பொறுமை
            நின் திரு மகிமையும்
            சந்தமாய்[1] நிறைந்திட இதில்
            சந்ததம் ஈவாய் நின் ஆசியை. - மா

4.         தோத்திரம் ஜெபம் தியானம்,
            தூய்மையாம் பிரசங்கமும்,
            பார்த்திபா[2] இவ்வாலயத்தில்
            பக்தியாகவே நடந்திட. - மா

5.         நீதி ஞாயம் தெய்வபக்தி,
            நேர்மைபேதத் தியானமும்
            நாதனில் விசுவா சமும் மிஞ்சி
            நன்கு போற்ற தாசர்க்கருள் புரி. - மா

­ச.ஜெ. சிய்


[1] அழகாய்
[2] அரசனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு