பயந்து கர்த்தரின் பாதை யதனில்
சங்கீதம் 128
318. இந்துஸ்தான் ஏகதாளம்
பல்லவி
பயந்து
கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்.
அனுபல்லவி
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்.
சரணங்கள்
1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,
தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்.
2. ஒலிவமரத்தை சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே.
3. கர்த்தருன் வீட்டை கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
-
வீ.ப.கா. சுந்தரம்
Comments
Post a Comment